உடுமலை, அக்டோபர் 11-
உடுமலை பள்ளபாளையம் அருகே திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் பத்மாவதி தாயார். ஆண்டாள் மற்றும் ரேணுகாதேவி, ஹயக்ரீவர் தன்வந்திரி சக்கரத்தாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு தனி தனி சன்னதி உள்ளது.
புரட்டாசி சனிக்கிழமை முதல் வாரம் முதல் நான்காவது வாரமான நேற்று வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். நான்காவது வாரம் சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமா இருந்தது இதை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர்.
