கோவை மாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்இன்று 11-01-2025 காலை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் பேரணியாக சென்று உக்கடம் பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சுகாதார அலுவலர் SBM விஜயகுமார்,சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி 1 செயலாளர் மார்க்கெட் மனோகரன் Mc , வட்டக்கழக செயலாளர்கள் டவுன் ப.ஆனந்தன் நா.தங்கவேலன் , மற்றும் மார்க்கெட் மூர்த்தி, கல்லூரி ஆசியர்கள் மாநகரட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.