திருநெல்வேலி, நவ.13:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று [நவ.13] காலையில் திருநெல்வேலியிலும், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” என்.சிலம்பரசன் தலைமையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” சிலம்பரசன் பங்கேற்று, மனு கொடுக்க வந்திருந்த 17 பேர்களிடம் இருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். “பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்!என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, மனுக்கள் மீதான விசாரணையை, உடனடியாக மேற்கொண்டு, அவற்றை விரைந்து முடித்து வைக்குமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்