உடுமலை : நவம்பர் 05.
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது:
நமது பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளில் கோமாரி ,அம்மை. மற்றும் உண்ணி காய்ச்சல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
கிராமத்தில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நோய்களால் கடந்தாண்டில் இப்பகுதியில் மட்டும் 63 கால்நடைகள் உயிரிழந்துள்ளன எனவே தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.
உண்ணிகாய்ச்சல். மற்றும் மடி நோய், தாக்குதல் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கிளை நிலையங்களில் கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் துக்கை யண்ணன் மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதல் கட்டுப்பாடு குறித்தும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் தென்னையில் வாடல் நோய் கரும்பு சாகுபடி குறிப்புகள் குறித்து பேசினார்.
முன்னாள் வட்டார வேளாண் இயக்குனர் மகாலிங்கம் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு குறித்து பேசினார். உடுமலை சுற்று பகுதி விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
