உடுமலை நவ.27-
உடுமலை அரசு பள்ளியை விட்டு வெளியேற சுவர் ஏறி மாணவர்கள் குதிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்கள் கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துள்ளி திரியும் பருவ காலம் எல்லை இல்லா மகிழ்ச்சி நிறைந்ததும் மறக்க முடியாத பல்வேறு நினைவலைகளை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு வாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களும் போதி மரங்கள் தான்.
சில சமயத்தில் அங்கு நிகழும் சம்பவங்கள் ஆயுள் வரை மறக்க முடியாத தாங்கி விடும் இதுபோன்ற நிகழ்வுகள் உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கின்ற மாணவர்கள் சிலர் பள்ளி உணவு இடைவேளையின் போது சுவர் ஏறிகுதித்து வெளியே செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மாணவர்களுக்கு கல்வியோடு அவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் விளையாட்டுப் போட்டியில் நடத்தப்படுகிறது. இதில் தடகளப் போட்டியின் போது உயரம் தாண்டுதலில் சாதனை படைக்கும் மாணவர்களை பலரும் பாராட்டுவார்கள்.
அந்த மாணவரின் சாதனையை பார்க்கும் பொழுது மற்ற மாணவர்களும் தாமும் இது போல் செயல்பட்டு பலரின் பாராட்டை பெறவேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரம் ஒரு மாணவர் செய்யும் தவறான செயலை மற்றவர்களும் பின்பற்றினால் அது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்து விடும்.
இதற்க்கு உதாரணமாக இந்த பள்ளியில் சில விதிமுறை மீறிய செயல்கள் மற்றும் முகம் சுளிக்கும் வகையில் அமைவதுடன் ஆபத்திலும் முடிவடையும் நிலை ஏற்படுகிறது. அதாவது இந்த பள்ளியின் வடமேற்கு பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது.
மறைவான பகுதியான இங்கிருந்து தான் மதிய உணவுகள் இடைவேளையின் போது மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வெளியே செல்கின்றனர் அவர்கள் எங்கு செல்கின்றனர். எப்போது திரும்பி வருகிறார் என்பது தெரியவில்லை ஒரு சிலர் இவ்வாறு செய்வதை பார்த்து பார்த்த மாணவர்களும் இதுபோல் தவறில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மேலும் வெளியே சென்று வரும் மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கும் சூழல் நிலவுகிறது பள்ளி நிர்வாகத்திற்கு போக்கு காட்டி விட்டு மாணவர்கள் இது போன்ற முறையற்ற செயல் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது இதனால் மதிய உணவு உள்ளிட்ட இடைவேளை நேரங்களில் மாணவர்களை கண்காணிப்பதற்கு தேவையான முயற்சி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இது மட்டுமின்றி பள்ளி நேரத்தில் சீருடையுன் வெளியேறும் மாணவர்களை அடையாளம் கண்டு முறையாக விசாரிப்பதுடன் அவர்களின் பெற்றோரையும் வரவழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நிரந்தர தீர்வு காணும் வகையில் சுற்றுச்சுவரின் மீது கம்பி வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம் இதன் மூலம் மாணவர்களின் படிப்பும் எதிர்காலமும் பாதுகாக்கப்படும். எனவே மதில் சுவர் ஏரி குதிக்கும் மாணவர்களுக்கு கடிவாளம் போட ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
