Headlines

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி, ஜூன்.25:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கிராமம் “கூந்தங்குளம்” ஆகும்.மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், இங்கு தான் உள்ளது. முழுமையாக ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும், இங்குள்ள 2-வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு வாரகாலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, குதண்ணீர் கொண்டுவர வேண்டியதுள்ளது. முறையான குடிநீர் பலநாட்களாக வழங்கப்படாத காரணத்தால் ஆத்திரமடைந்த 2- வது வார்டு மக்கள் கைக்குழந்தையுடன் காலி குடங்களுடன், புரட்சி பாரதம் கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் தலைமையில், நான்குனேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, இன்று [ஜூன்.25] காலையில் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவல்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக, அவர்கள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *