திருநெல்வேலி,ஜன.11:- திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள, தன்னுடைய முகாம் அலுவலகத்தில், நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன், சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். முன்னதாக அலுவலக திறந்த வெளியில், புத்தம்புதிய மண்பானையில் பச்சரிசி, சிறுபருப்பு, மண்டவெல்லம், நெய், அண்டிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் ஆகியவை கொண்டு, மண் அடுப்பில் விறகு மற்றும் ஓலைகளைக் கொண்டு தீ மூட்டி, “சர்க்கரை பொங்கல்” தயாரிக்கும் பணியினை, நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துவக்கி வைத்தார்.அத்துடன் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சுதர்சன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் குரு கவிப்பாண்டியன், மண்டல காங்கிரஸ் தலைவர் கெங்கராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாநில துணைத்தலைவர் விவேக் முருகன், வட்டார காங்கிரஸ் தலைவர் டீயூக் துரைராஜ்,மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆபிரகாம் வெஸ்லி, பொருளாளர் நெகேமியா ஜான், துணை தலைவர்கள் மகேஷ் ஜான், ஆரோக்கிய பாபு, மகளிர் அணி உஷா, செய்யது அலி, பாத்திமா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால்,நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கிளாட்சன், நெல்லை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜானகி ராமன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.