கடையநல்லூர் மார்ச் 25
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த மையத்தில் சுமார் 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் அருகில் தினசரி காய்கறி சந்தையும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடையநல்லூரில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான காவலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் தீவிர முயற்சியால் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பொதுமக்கள் எந்த விதமான சிரமமுமின்றி எளிதாக சென்று வரும் அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் இருந்த அங்கன்வாடி கட்டிடத்தை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தலைமை காவலர் முத்துராஜ், சங்கர், கனிராஜ் தீவிர முயற்சியாலும், அப்பகுதி நன்கொடையாளர்கள் மூலமாகவும் இந்த அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்பட்டது அந்த சுவர்களில் மத ஒற்றுமையை வலியுறுத்தும். வகையிலான ஒவியங்கள், திருக்குறள், அப்துல்கலாம் திருவருப்படம், தேசிய கொடி படங்கள் ஆகியவை வரையப்பட்டிருந்தது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமை தாங்கினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட துணைத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான அக்பர் அலி. எம் சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 17வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ் எம் சி நன்கொடையாளர்கள் ஏ .ஐ .கே. கோல்டு வழக்கறிஞர் முஹம்மது ஜாவித், இத்தாலியன்பீரப்பா மற்றும் சமூக ஆர்வலர் குறிச்சிசகிலாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பர்ஹத் சுல்தானா அனைவரையும் வரவேற்றார்
நகர்மன்ற தலைவர் ஹபீபுர்ரஹ்மான், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் ஆகியோர் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
முன்னதாக பொதுமக்கள் அங்கன்வாடி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான , மின் விளக்கு சேர் பல வகைகள் ஸ்கூல் பேக் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் உட்பட முன்னதாக குழந்தைகளுக்கு தேவையான சேர், தட்டு, புத்தகம், பந்து, கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர் நிகழ்ச்சியில் புளியங்குடி அப்துல் கலாம் பொதுநல சேவை அமைப்பு தலைவர் சின்னராஜ் , உமர் கத்தாப் , சப். இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ்மேனன், நரசிங்கம், ரவி, சாமுவேல், எஸ்.எஸ்.ஐ.மாரியப்பன், தனிப்பிரிவு அப்துல் கனி, செந்தில், நிலைய எழுத்தர் தங்கத்துரை, தலைமை காவலர்கள் ராஜேந்திரன், கருப்பசாமி, செந்தில்குமார்,கடையநல்லூர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அலங்காரம், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சீதாராமன், மணிச்சுடர் நாளிதழ் மாவட்ட புகைப்படக் கலைஞர் குறிச்சி சுலைமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.