தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், ஒத்தக்கால் மண்டபம் முதல் வேலந்தாவளம் வரை உள்ள சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகையால் அங்குள்ள குப்பைகளை அகற்றி அங்கு குப்பைத் தொட்டி அமைத்து கொடுக்குமாறு ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
கோவை செய்தியாளர் : ல. ஏழுமலை
