திருப்பூர் மாவட்டம், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை விரிவாக்க திட்டத்தின் கீழ் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கோடந்தூர் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு எழுத்து திட்டத்தின் கீழ் முதல் பருவத் தேர்வுக்கான வினாக்களை பாடல் பாடியும் , ஆடியும் மாணவ மாணவியருக்கு கற்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை வனக்காப்பாளர் பா.சேட்கருப்பசாமி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கா.ஜோதிபாசு வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை பேராசிரியர்கள் முனைவர் த.மணிமொழி, கோ.வைஷ்ணவி மற்றும் மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக தழிஞ்சி மற்றும் கோடந்தூர் அரசு மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு பேனா , பென்சில் , சிளேடு , வாய்ப்பாடு ஆகியவற்றை வனத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் , கல்லூரி மாணவிகள் ஆகியோர் மாணவ மாணவியருக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கோடந்தூர் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
