பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடத்தி வருகின்றது.

அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி HRM அரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி வழிகாட்டுதல் படி மாவட்ட தலைவர் திரு A.தர்மன் ஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் நடைபெற்றது .
இதில் நமது மாநில பொதுச் செயலாளர் அக்கா கார்த்திகாயினி அவர்கள் ராணிஅஹில்யாபாயின் வீரத்தையும் விவேகத்தையும் அவரின் போர் ஆற்றலையும் , அவரின் ஆளுமை திறமையையும் வெகுவாக சிறப்பாக எடுத்து அனைவருக்கும் கூறினார். இது நம்மிடையே ஒரு பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
