கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்* 1.பேரிச்சம்பழம்
2.ஹெல்த் மிக்ஸ் பவுடர்
3.முட்டை
4.கொண்டைக்கடலை
5.பச்சைப்பயிறு
6.மணிலா
7.மொச்சை பயறு
8.அவில் வழங்கும் விழா…
இன்று 18-09-2025 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் சுமார் 20 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமரன் மருத்துவர் ரஞ்சிதா அவர்கள் நோயாளிகளுக்கு காச நோய் தடுப்பு முறை பற்றிய அறிவுரைகள் வழங்கினார்கள் .
ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் நோயாளிகளுக்கு சிறப்புரை வழங்கினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு துரைராஜ் அவர்கள் நன்றிஉரை வழங்கினார்.
உடன் ரங்கப்பனூர் ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் அவர்கள் மற்றும் ஆய்வக மேற்பார்வையாளர் மகேந்திரன் மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் திருமதி மரியபுஷ்பம், ஜெயந்தி, வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் – GB. குருசாமி
