ஆக் 20, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் 51வது வார்டில் ரூ.43.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று துவக்கமிடப்பட்டது.
பிள்ளையார்புரம், சின்னநைந்தான்விளை மற்றும் திருநகர் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் இப்பணியின் மூலம் அப்பகுதி மக்கள் சாலை வசதி பெற உள்ளனர்.
துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் ரே. மகேஷ், தெற்கு மண்டல சேர்மன் Dr. பி. முத்துராமன், மாநகராட்சி பொறியாளர் ராஜ சீலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
