Headlines

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்
தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.!

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மாவட்ட கலெக்டர் வினீத் உத்திரவிட்டார். அதன்படி கடந்த 24.04.2023 ம் தேதியன்று கருத்து கேட்பு கூட்டம் அப்போதைய உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது. மாலை வரை நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் தனித்தனியாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிகழ்வுகளை அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரைப்படி 17 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் 2-வது முறையாக உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித்தனியாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் தாசில்தாருக்கு அளித்துள்ள மனுவில், புகாரில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் படி ஊராட்சியில் நிதிஇழப்போ கையாடலோ செய்யவில்லை எனவும், எனவே குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்
மணிவேல்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *