Headlines

மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகரி அதிகாரிகளுடன் ஆய்வு.

மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகரி அதிகாரிகளுடன் ஆய்வு.

நீலகிரி மாவட்டம் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகர் உள்ளிட்ட கிராம் மக்கள் வழிப்பாதை தொடர்பான வழக்கை சுட்டி காட்டி அண்மையில் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு கடிதம் அளித்ததன் பேரில் இன்று கொடநாடு ஊராட்சி கூட்டறையில் தமிழ்நாடு அரசின்
மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் கொடநாடு மு.பொன்தோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வழிப்பாதை தொடர்பான மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

இதில் அதிகாரிகள் கோத்தகிரி வட்டார தாசில்தார் , கோத்தகிரி காவல்நிலைய ஆய்வாளர் அருளானந்தம் , கொடநாடு கிராம நிர்வாக அலுவலர்,கிராம் வருவாய் அலுவலர் கலந்து கொண்டனர்.

திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விவேக் பொன்தோஸ் ,மு.கொடநாடு ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மகளிரணி ஜெயா, பூங்கோடி மனோகரன் மற்றும் அண்ணா நகர்,காமராஜ் நகர் ஊர் தலைவர்கள் தங்கவேலு, 30திற்கும் மேலான பொதுமக்கள் பங்கேற்று தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்….

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *