செப் 10, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது.
இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
