Headlines

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை சிற்றங்காடி திறப்பு…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை சிற்றங்காடி திறப்பு…

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் சிறு கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு.தே.சித்ரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அங்காடியை திறந்து வைத்த மண்டல இணைப்பதிவாளர் முதல் நுகர்வோராக கொள்முதல் செய்து விற்பனையை துவக்கி வைத்தார்.

மேலும் சிற்றங்காடியில் பல்வேறு சிறந்த கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் பொதுமக்கள் இதனை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உதகமண்டலம் சரக துணைப்பதிவாளர் திரு. அஜித்குமார், பண்டகசாலையின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர், மேலாளர் திருமதி. பார்வதி, கூட்டுறவு சங்க பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *