ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவாளர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் சுமார் பன்னிரெண்டாயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் எப்பநாடு பகுதியில் அமைந்துள்ள எப்பநாடு தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் இன்று ஜூன் 20ம் தேதி நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக மண்டல இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர், திரு. சி. அய்யனார், துணைப்பதிவாளர் மேலாண்மைக் இயக்குநர் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, திரு. செ. கமல் சேட் துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்), திரு. பாலாஜி செயலாட்சியர் எப்பநாடு இண்ட்கோ, கூட்டுறவு சங்கங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.
