நாகர்கோவில், நவம்பர் 10:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை, ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, மற்றும் விவசாய வளங்கள் பாதுகாப்பு கோரி அமைதியான தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் நடைபெற்றது.
இதில் பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்குதல், விவசாயிகளின் போர்வையில் நடைபெறும், ஆயிரம் கோடி மதிப்பிலான வண்டல் மண் முறைகேடுகளை தடுக்குதல், பட்டியல் இனத்தை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் ஜாதி வன்கொடுமைகளை நிறுத்துதல், மற்றும் லஞ்சம், ஊழலற்ற குமரி மாவட்டத்தை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தென் மண்டல துணைச் செயலாளர் பகலவன் வரவேற்புரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சின்னக்கனி, கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் கோட்டார் யூசுப், சி.பி.ஐ.எம்.எல் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன், மற்றும் அல் காலித் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, அரசின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கான ஒலி-ஒளி வசதியும், காவல் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
முக்கிய கோரிக்கைகள்:
பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்கல், வண்டல் மண் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை, ஜாதி வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி, ஊழலற்ற குமரி மாவட்டம் உருவாக்கல், “சமூகநீதி மற்றும் நேர்மை காக்கப்படாவிட்டால், அமைதி சாத்தியமில்லை!”
அல் காலித், நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
