உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது.
இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் உயிரிழந்து கிடந்தது 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனத் தெரிய வந்தது. இந்நிலையில் இது இயற்கை மரணமா? அல்லது இந்த யானை மரணத்தில் மர்ம நபர்களுக்கு தொடர்புள்ளதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உடுமலை நிருபர் : மணி