செப் 22 கன்னியாகுமரி –
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி இன்று மாலை 3 மணியளவில் சென்ற கேரளா அரசு பேருந்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
TN75BC 0833 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்விப்ட் கார், பேருந்தின் முன்னே மிக மெதுவாக ஓட்டி, ஓவர்டேக் செய்ய முயன்றதும் நடுரோட்டில் பாய்ந்து முன்பாக வந்து பிரேக் அடித்து அச்சுறுத்தியது.

பார்வதிபுரம் முதல் தோட்டியோடு வரையிலான பயணத்தில், பேருந்து ஓட்டுனருக்கும் உள்ளே பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சாலையில் டூவீலர் இளைஞர்கள் ஸ்டண்ட் செய்தாலே உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலிஸார், இவ்வாறு அரசுப் பேருந்தின் பயணிகளை ஆபத்தில் ஆழ்த்திய காரோட்டுனருக்கும் அதே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரபரப்பான சாலைகளில் வாகனங்களை அலட்சியமாக ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தாவிட்டால், எந்த நேரமும் விபத்து நேரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
