திண்டுக்கல் செய்தி
3.11.2025
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி புதூர் கெச்சேயினிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி பெருமாள் அம்மாள் வயது 70. அவருடைய உறவினர்களான கோபால் சரவணன் ஆகியோர் பெருமாள் அம்மாவின் நிலத்தையும் வீட்டையும் அபகரிக்கும் நோக்கில் அவரது இரு மகன்களையும் அடித்து ஊரை விட்டு விரட்டி விட்டனர்.
ஏற்கனவே தான் 30 வருடமாக குடியிருந்து வந்த தனது இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
ஏற்கனவே வட மதுரை காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக பெருமாள் புகார் அளித்ததன் பெயரில் அவரது உறவினர்களை காவல்துறையினர் ஒரு வார கெடுவுக்குள் இடம் உங்களது என்றால் அதற்கு உண்டான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீடு பூட்டி இருப்பதால் அதை சுத்தம் செய்வதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவரது உறவினரான அந்த மூன்று பேரும் அவரை அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் வேறு வழி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்றம் ஆகிய இடங்களில் இரு தினங்களாக தங்கிருந்துள்ளார்.
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெருமாளம்மாள் தனது வீட்டையும் நிலத்தையும் அபகரிக்க நினைத்து வீட்டிற்கு சென்ற தன்னை கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் தனது வீடு நிலம் ஆகியவற்றை மீட்டுத் தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
