கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்
சென்னை,கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்டிக்கும் விதமாகவும் , மருத்துவர் பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து இன்று தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழ் நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் அன்புமணி தலைமையில் டாக்டர் வெங்கடேசன் மனநல மருத்துவர் டாக்டர் சித்ரா மற்றும் மருத்துவர்கள் கண் பரிசோதகர் ஆதிநாராயணன் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்.