பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் ஆற்றல் மையத்தில் மகளிருக்கான கழிப்பறையில் கதவுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அங்கு படிக்க வரும் கிராமப்புற மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பழனி நிருபர் நா.ராஜாமணி.
