Headlines

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி,அக்.20:-

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்த நிலையில், மாணவனின் உறவினர் சங்கரநாராயணன், சிறுவனின் உடல்நிலை குறித்து, திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் “வழக்கறிஞர்” கிருஷ்ண வேணியிடம், எடுத்துக் கூறினார். இனைக் கேட்ட கிருஷ்ணவேணி சின்னத்துரை, சற்றும் தாமதிக்காமல், உடனடியாக “தமிழ்நாடு முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென் மண்டல திமுக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மா. கிரகாம்பெல் ஆகியோரின் கவனத்துககு கொண்டு சென்று, சிறுவனுக்காக உதவி கோரினார்.

இதன் பேரில், சிறுவன் பாலகிருஷ்ணனுக்கு, திருச்சி “மகாத்மா காந்தி” அரசு மருத்துவமனையில், சிறுநீரகப் பகுதிக்கான அறுவை சிகிச்சை, உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையின், நிபுணர் குழுவின் அர்ப்பணிப்பு மிக்க பணியினால், சிறுவன் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு, தற்போது ஆரோக்கியமாக உள்ளான்.

இந்த சிறப்பு சிகிச்சைக்கு, உறுதுணையாக இருந்த, அரசு மருத்துவ மனை, சிறுநீரகப் பிரவு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ், மருத்துவமனை தலைவர் (DEAN) டாக்டர் குருநாதன், திருநெல்வேலி தனியார் மருத்துவமனை நிறுவனர் கோகுல் ஆகியோருக்கு, சிறுவனின் குடுமபத்தினர், நன்றி தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *