நாகர்கோவில்; நவ.25
நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) உதவி ஆட்சியர் திரு. ராகுல் குமார், ஐ.ஏ.எஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோட்டார் தைக்கா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெறும் படிவங்கள் பெறுதல், பதிவுசெய்தல், விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் தீவிரமாக கண்காணித்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற செயல்பாடுகள் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெற வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் வீடு-வீட்டு சரிபார்ப்பு, படிவங்களின் முழுமை, பொதுமக்களிடம் விவரம் சேகரிப்பு போன்றவற்றையும் அவர் விவரமாக பரிசோதித்தார்.
இத்தின ஆய்வில், திட்ட இயக்குநர் நசீர், 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத், வட்ட செயலாளர் ஹிதாயத், RI சத்யமூர்த்தி, BLO-க்கள் முத்துலட்சுமி, சுதா, ரஹீமா, சாந்தி, அமிர்தகனி, தீபா, தினேஷ், செய்து அலி, பர்ஹா, ரபீக் உள்ளிட்டோர், மேலும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
