உலகச்சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்க்கொள்ளப்பட்டது.

இதில் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோத்தகிரி கூட்டுறவுப் பண்டகசாலையிலும், அரவேணு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்க நியாயவிலைக்கடையிலும் , மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏலமையத்தின் சுற்றுப்புற பகுதி ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
இதுபோல் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
