ஆக் 08; கன்னியாகுமரி –
கன்னியாகுமரி, வன உயிரின வார விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சி அலுவலகம் நாஞ்சில் கூடாரத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு, இ.வ.ப., உதவி வன பாதுகாவலர் ஶ்ரீவல்சன், உதவி ஆட்சியர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (DRDA) மைக்கில் அந்தோணி பெர்னாண்டஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, வன சரக அலுவலர்கள் ராமு, வெங்கடேசன், மொகைதீன் அப்துல் காதர், கலைமணி, வன பாதுகாப்பு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியாக வன சரக அலுவலர் கலையரசன் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
கேமராமேன் – ஜெனீருடன், குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் – பாவலர் ரியாஸ்.
