சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது,
இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
எனவே இதற்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் என (http://awards.tn.gov.in) தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 31.12.2025 ஆகும்.
இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட 3 நகல் ஒப்படைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
