திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “ஊட்டச்சத்தை உறுதி செய்”- 2-ஆம் தொகுப்பு தொடக்க விழா, இன்று [நவ.25] நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான “ரூபி” ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,”குத்து விளக்கு” ஏற்றி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தாய்மார்களுக்கு “ஊட்டச்சத்து” பெட்டகத்தினை, சட்டமன்ற உறுப்பினர் மனோகரன்,
வழங்கினார். பின்னர், அவர் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து, அனைவருக்கும் “மதிய உணவு” வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் பர்வத ராணி, நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா, குழந்தை வளர்ச்சி வட்டார திட்ட மேற்பார்வையாளர்கள் பாக்கியவதி, கலையரசி, குழந்தை வளர்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துலெட்சுமி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி உட்பட பலர்,கலந்து கொண்டனர்.