இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலை கனலை மூட்டியவர் . தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடியவர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செக்கிற்கு நேற்று (05-09-2025) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ப.பா. ரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.புருஷோத்தமன் முன்னாள் வட்டாட்சியர் ஆர்.புருஷோத்தமன், இஸ்கப் அமைப்பின் மாவட்டச் செயலாளர் எம்.வி.ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், சங்கமம் அமைப்பின் பொறுப்பாளர்கள் செல்வின், ஞானகுமார், ஜான், வழக்கறிஞர் கே.சுப்பிரமணியம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் அசரப் அலி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட செயலாளர் குணசேகர், கலை. அஸ்வினி, மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், கவிஞர் நான்சி கோமகன் , கோட்டியப்பன், ராபர்ட், பேராசிரியர் ராஜேந்திரன் மற்றும்100,க்கும் மேற்பட்டதோழர்தள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
