வட்ட செயலாளர் vs மாமன்ற உறுப்பினர் வார்த்தை மோதல்கள்! வெளியான ஆடியோ.!
கன்னியாகுமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 39-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் ரிஸ்வானா பாத்திமா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே வார்டில் உள்ள வட்ட செயலாளர் சையது வீட்டிற்கும் சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக வட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானாவிடம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.

மேலும் அந்த ஆடியோவில் பேசியதாவது ; ஹலோ நான் சையது பேசுறேன்மா , காலைல வீட்டுக்கு போயிருந்தீங்களா என கேட்க ஆமாம் அண்ணா உங்களுடன் ஸ்டாலின் 9ஆம் தேதி நடப்பது தெரியாது அதற்காக நோட்டீஸ் கொடுக்க போனேன் என்றார் பாத்திமா. அப்போது குறுக்கிட்ட வட்ட செயலாளர் சையது, முகாம் நடப்பது எனக்கே தெரியாதா? என அவருக்கு உண்டான பாணியில் பேச தொடங்கிய அவர், வட்ட செயலாளர் வீடு கூட தெரியாதா உனக்கு?
வீட்டிற்கு முன்பு வட்ட செயலாளர் என ஃபோர்டு வச்சு இருக்கேன் அதைக்கூட பார்க்கலயா நீ? என்னோட வீடு எதுன்னு தெரியாத உனக்கு, ஓட்டு போட்ட பொதுமக்கள் வீடாவது தெரியுமா? கடைசியாக இந்த வார்டுக்கு எப்போது வந்த? என கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய ரிஸ்வானா பாத்திமா எனக்கு சத்தியமா உங்க வீடு தெரியாது. உங்க வீட்டுக்கு வந்தபோது பையன் இருந்தான். அப்போது அம்மா ஒருவர் வந்து இது சையது வீடு தான் என கூறியதும் தான் உங்கள் வீடு என தெரிந்து கொண்டேன் என்றார். இதனை அடுத்து பேசிய வட்ட செயலாளர் சையது, ரிஸ்வானா பாத்திமாவிடம் வீட்டில் என்ன கேட்டீங்க? எத்தனை ஓட்டு இருக்குன்னு கேட்டீங்களா ஏன் அப்படி கேட்டீங்க.?
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஓட்டு எத்தனை இருக்கு ? வீட்டில் தலைவர் , தலைவி பெயர் இதெல்லாம் ஏன் கேட்குறீங்க.? வோட்டர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்களை சேர்க்க வேண்டும். இதையெல்லாம் கேட்க தெரிஞ்ச உனக்கு பொதுமக்கள் பிரச்சனை குறித்து ஏன் கேட்கவில்லை.? கவுன்சிலராகி எத்தனை வருஷம் ஆச்சு? இந்த தெருவுக்குள்ள எப்போ வந்திருக்க சொல்லு? சங்கு தெருவுக்குள்ள ரவூப் பழைய ரிப்போர்ட்டர் ஒருத்தர் இருக்காரு , உன்னோட கணவர் ஹிதாயத் அவர்கிட்ட பணத்தை வாங்கி கொண்டு வீட்டு வரி ரசீதை மாத்தி தருவதாக சொல்லி இப்போது வரை மாத்தி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நபர் திமுக கட்சியை குறை சொல்கிறார். பணம் கொடுத்தவரிடம் கேளுங்கள் திமுக கட்சியை குறை சொல்லக்கூடாது என நான் கூறினேன். இதெல்லாம் உனக்கு தெரியுமா.? கவுன்சிலர் நீ தான? ஆனால் உனக்கே இதெல்லாம் தெரியாதா?
மாநகராட்சி பணியில் வேலை பார்த்து நான், செலவு செய்தது நான். ஆனால், மேயர் கொடுத்த 25,000 பணத்தில் எனக்கு ஒரு ரூபாய் கூட தரல, மேயர் , மாநகர செயலாளர் சொல்லியும் எனக்கு பணம் தரல, இதெல்லாம் தப்பு இல்லையா? உனக்கு எதிரா என்ன வேலை செய்தேன். அப்படி நான் எந்த வேலையும் செய்யல, என பேசிய வட்ட செயலாளர் சையது, அடுத்த தேர்தலில் எனது வீட்டு அம்மாவை தேர்தலில் நிற்க வைக்க போகிறேன். வீட்டில் வந்து எத்தனை ஓட்டு என எதற்கு கேட்க வேண்டும். அதில் எனக்கு வித்தியாசமாக தெரிகிறது. தேர்தல் முடிந்ததிலிருத்து தொகுதி விசயமா வரும்போது எனக்கு ஒருமுறை கூட ஃபோன் செய்யவில்லை. என்னோட வீட்டில் பைப் லைன் உடைந்த போது இதே உன்னோட கணவர் ஹிதாயத் கிட்ட சொன்னேன். ஆனா அதை கண்டுக்கல , பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட 3000 பணம் வாங்கிட்டு போயிருக்காரு உன்னோட கணவர். அந்த எதிர் வீட்டுக்காரர் என்னை கேட்கிறார். நீங்க சொல்லித்தான் ஓட்டு போட்டேன். ஆனா பணம் வாங்கிட்டு தான் வேலை செய்து தருகிறார்கள். நான் இதே உன்னோட கணவர் ஹிதாயத் மேல புகார் தருகிறேன் உன்னால நடவடிக்கை எடுக்க முடியுமா.? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மேலும், வார்டு கவுன்சிலர் ரிஸ்வானா பாத்திமாவின் கணவர் ஹிதாயத் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட 39வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளை செய்து தருவதற்கு கூட ஆயிரம் முதல் லட்சங்கள் வரை பணம் கொடுத்தால் மட்டுமே பணிகளை செய்ய முடியும் என கராராக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் , வார்டு கவுன்சிலர்களின் அத்துமீறல்களால் திமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதுசம்பந்தமாக அந்த மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உரிய நடவடிக்கை எடுப்பாரா.?
