உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியானது உடுமலை குட்டைத் திடலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியை உடுமலை காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார், பேராசிரியர்கள், உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர், பணியாளர்கள், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறையினர் இணைந்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.