திருநெல்வேலி, ஜூலை.9:-
ஒன்றிய அரசே !மோடி அரசே! தொழிலாளர் விரோத, நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு !
பொதுத்துறை நிறுவனங்களில், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடு !
விலைவாசியைக் கட்டுப்படுத்து !
பொதுத்துறை நிறுவனங்களில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி விடு!
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்டு !
மக்கள் விரோத, புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய பொது வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் [சி.பி.ஐ. எம்.எல்] கட்சியின் சார்பாக, திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீ புரம், தலைமை அஞ்சலகம் முன்பாக “மறியல் போர்” நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில், மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் கருப்பசாமி,மாரிமுத்து, ரவிடேனியல்,அன்புச் செல்வி, வேலு, செய்யது அலிபாத்திமா, சுப்பிரமணியன், நிர்வாகிகள் துர்க்கை முத்து ,செல்வக்கணபதி, மோகன் குமார், முப்புடாதி, சுரேந்தர், சிவகாமிநாதன், சண்முகம், ஆறுமுகம், ரவி ராஜ், இசக்கியப்பன் உய்காட்டான் உட்பட, நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் “கோஷம்” போட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
