திருநெல்வேலி, செப்.22:-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று (செப்டம்பர். 22) மாலையில், திருநெல்வேலியில் கோரிக்கை முழக்க, மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* 50 ஆண்டு கால பொன்விழா கண்ட, அங்கன்வாடி ஊழியர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்!
* * * குறைந்தபட்ச ஓய்வூதியமாக,ஒன்பது ஆயிரம் ரூபாயினை, அகவிலைப்படியுடன் கூடிய, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்!
* பணிக்கொடையாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், வர்களுடைய உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்!
உள்ளிட்ட,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை வண்ணார்பேட்டை, செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியளர்கள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பிரேமா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.முருகன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தும்,ஞானாம்பாள் கோரிக்கைகளை விளக்கியும், பேசினார்.
சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் செண்பகம், சிஐடியு மாவட்ட செயலாளர் எல்.சரவணபெருமாள், மாவட்ட பொருளாளர் ராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மலை பகவதி, நிர்வாகிகள் பூபதி, ஓமனா கல்யாணி, சாந்த குமாரி ,வசந்தா பாய் ,ராமலட்சுமி லலிதா ,தங்கம் விஜயகுமாரி உள்ளிட்டோருடன், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, “கோஷம்” போடடனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்.
