தக்கலை அக்டோபர் 27,
திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார்
அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது
கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்
