அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர். செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், சிவராமபேட்டை நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி,சேலை, அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி திடக்கழிவு மேலாண்மை பூங்காவில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நெகிழி கழிவு சேமிப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். கொடிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கொடிக்குறிச்சியில் 15வது ஒன்றிய நிதிக்குழு மானியம் 2024 இல் ரூ.347 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எரிமேடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், சங்குபுரம் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு சுகாதார நிலையத்தில் தாய் சேய் வார்டுகளை ஆய்வு செய்தும், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், கடையநல்லூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தினை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, இன்று முழுவதும் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, கடையநல்லூர் வட்டத்தில் உள்ள S.S. கிராண்ட் மஹாலில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கடையநல்லூர் வட்டாட்சியர் பாரசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் : முகமது இப்ராஹிம்.