ஆக் 28, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார்.
இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
