திருநெல்வேலி, செப். 28:-
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி “உலக முதியோர் தினம்” கொண்டாடப்படுகிறது.
முதியோரின் பங்களிப்புகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்சார்ந்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதுமே, இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தினமானது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
அதன் அடிப்படையில், திருநெல்வேலி தாழையூத்து, சங்கர் நகரில் உள்ள, சங்கர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் ( NSS) சார்பாக, இன்று (செப்டம்பர். 28) காலையில், “உலக முதியோர் தினம்” கொண்டாடப்பட்டது.
இந்த நாளை முன்னிட்டு, NSS சிறப்பு முகாம் நடைபெற்று வரும், வடக்கு தாழையூத்தில், இன்று மூத்தகுடி மக்களுக்கான, கட்ணமில்லா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமை வகித்து, முகாமினை துவக்கி வைத்தார். வந்திருந்தவர்களை, ஆசிரியர் ராகுல் வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர்.சொ.உடையார், குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் “கவிஞர்” கோ கணபதி சுப்ரமணியன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்.இ. அருணாச்சலம் தலைமையில், இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து மருந்து- மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தனயார் மருத்துவமனை மேலாளர் முருகன், நன்றி கூறினார்.
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வடக்கு தாழையூத்து பகுதியில் உள்ள முதியோர்கள்மற்றும் பொது மக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஆக்ஸிஜன் அளவு, இரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
NSS திட்ட அலுவலர் செல்வன், நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்
