செப் 4 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார்.
இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
