கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அசோக் நகர் பகுதியில் சாவித்திரி நகரில் நடைபெறும் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மற்றும் பாதாள சாக்கடைக்கள் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் மரகதம் மற்றும் பகுதி 2 துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.
