உடுமலை நவம்பர் 02.
உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் தணிக்கை அறிக்கை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மனநலம் மற்றும் பயிற்சி சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர், ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
