தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார் மாவட்டத்தின் பல்வேறு முக்கியமான ரயில் கோரிக்கைகளை மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சரை புதுடில்லியில் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதில் உள்ள முக்கிய கோரிக்கைகள் திருநெல்வேலி தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம் ,கீழக்கடையம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்யவும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்து அதனை ரயில் முனையமாக மாற்றவும், கீழப்புலியிலிருந்து கடையநல்லூருக்கு பைபாஸ் லைன் அமைக்கவும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு ரயிலையும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலையும் நிரந்தர ரயிலாக இயக்கவும், திருநெல்வேலி கொல்லம் மீட்டர் கேஜ் ரயில்களை மீண்டும் இயக்கவும் ஏற்கனவே மூன்று முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தாம்பரம் – செங்கோட்டை- தாம்பரம் அந்தியோதயா ரயிலையும் மீண்டும் இயக்கவும் செகந்திராபாத்- கொல்லம் சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார் அவர்களின் நடவடிக்கைக்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள்சங்கம் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.