கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதல்படி…
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்சி கன்னிகா தேவி காலணியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி நகராட்சி (பொ)ஆணையாளர் திரு. இளம்பருதி, மாவட்ட அவைத் தலைவர் திரு. போஜன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் திரு. நெல்லை கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. EXPO- செந்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. வீரபத்திரன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் திரு. பீமன், குன்னூர் ஒன்றிய செயலாளர் திரு. பிரேம்குமார், கோத்தகிரி ஒன்றிய துணைச் செயலாளர் திரு.கணபதி மற்றும்
ஊர் தலைவர் திரு. விஜயகுமார், துணைத் தலைவர் திரு. மகேந்திரன், ஊர் கோயில் தலைவர் திரு. தங்கதுரை, ஊர் பொறுப்பாளர்கள்: திரு. மனோகர், திரு. தங்கராஜ், திரு. மோகன், திரு. சதீஷ், திரு. ரமேஷ், திரு. விஜயன், திரு. பிரகாஷ், திரு. தமிழ்வாணன்,
கவுன்சிலர்கள்: திரு. லோகநாதன், திருமதி. ஜாஸ்மின் உட்பட கழக நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் பேசும் பொழுது தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக காலணி என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என அறிவித்தார். அதன் அடிப்படையில் “கன்னிகாதேவி காலனி” என்ற பெயரை “கன்னிகாதேவி நகர் ” என்று பெயர் மாற்றலாம் என தலைமை அரசு கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் கூறும் பொழுது கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
