திருநெல்வேலி, ஜன. 5:-
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளில், ஒரு லட்சம பணியிடங்களை பறித்து, தமிழ் மக்களுக்கு ‘துரோகம்’ செய்த, மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ‘அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்’ சார்பாக, நாடு தழுவிய முறையிலான ‘கண்டன ஆர்ப்பாட்டம்’ இன்று (ஜனவரி5) காலையில் திருநெல்வேலியிலும், நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில்நிலயம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆர். சடையப்பன், துணை செயலாளர் ஏ. சேதுராமலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) பொறுப்பாளர் எம்.லெனின் முருகானந்தம், விடுதலை தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.பி பாலன் ஆகியோர், கண்டன உரை நிகழ்த்தினர்.
நிர்வாகிகள் எம். நவ்ராஜ் மோசஸ், பி. ராம கிருஷ்ணன், பி. கண்ணன், ஜே. ஜெபின் ராஜ், எம். ஷாஜஹான், எம்.ராஜ் குமார், எஸ். பொன்னுத்துரை, ஏ. மாலிக், ஏ. அகஸ்டின், ஏ. துரை,ஏ. மிலன் பிரசன்னா ஆகியோர் கண்டன ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றிய பாசிச அரசுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு ஆதரவாகவும், ‘கோஷம்’ போட்டனர்.
சுமார் 1 மணி நேரம், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.** திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர “மேலப்பாளையம்” ஹஸன்.
