திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உத்திரபிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் 70வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து முன்னிலையாக மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி தலைவர் ஆடலூர். இராமமூர்த்தி விழாவின் சிறப்பாலைப்பாளராக பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் முகமது பக்ஸ் மற்றும் விழாவில் மாவட்ட செயலாளர் வடிவேலு மாவட்ட துணை தலைவர் ஜெயச்சந்திரன் மாவட்ட பொருளாளர் நாகேந்திரன் மகளிர் அணி பொறுப்பாளர்கள் வசந்தா, ராஜேஸ்வரி, கன்னிஸ்ஸ்வரி, மாசிலாமணி, மற்றும் துரைசாமி கர்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பழனிக்கு பாதயாத்திரையாக வருகை தந்த பக்தர்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்..
