Headlines

நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நாகர்கோவில்: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
மாவட்ட காவல் அலுவலகத்தில், தேர்தல் புகார் பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை இன்று திறந்து வைத்தார்.

புகார் அளிக்க எளிய வசதி
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியான செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்.

புகைப்படம், வீடியோ ஆதாரங்களையும் உடனடியாக அனுப்ப முடியும்.
புகார் அளிப்பவர்களின் தகவல்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும்.

சமூக வலைதள கண்காணிப்பு தீவிரம்
தேர்தல் தொடர்பான அவதூறு பதிவுகள், விதிமுறை மீறல்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

மீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடு
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், பிரச்சினைக்குரிய பகுதிகள் தொடர்பான தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்தும் இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.

முக்கிய தொடர்பு எண்கள்

SP கன்னியாகுமரி: 8122223319

Feedback Centre: 7708239100

சட்டமன்ற தொகுதிகள்:

நாகர்கோவில் – 7358776100

குளச்சல் – 7358068100

கிள்ளியூர் – 7358034100

கன்னியாகுமரி – 7305282100

விளவங்கோடு – 7358063100

பத்மநாதபுரம் – 7397463100

பொதுமக்களுக்கு அழைப்பு
இந்த வசதியை பயன்படுத்தி, ஒவ்வொரு குடிமகனும் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *