நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் பொதுமக்கள் அதிகம் கவனம் செலுத்தினர்.
குமரி மாவட்ட செய்தியாளர்
பாவலர் ரியாஸ்
