நாகர்கோவில், அக்.27:
நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
“இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், “அரசு வருவாயை உயர்த்தும் நோக்கில் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவது புரிந்துகொள்ளத்தக்கது.
ஆனால், இதுபோன்ற சாலையோர பார் வசதிகள் நகரின் நெரிசலான பகுதிகளில் அல்லாமல் வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்,” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மீனாட்சிபுரம் அரசு மதுக்கடையை மாற்றி அமைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தவாறே உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் கண்ணடைத்து இருப்பதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது உள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக: கேமராமேன் ஜெனீருடன்,
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
