ஆக் 09; கன்னியாகுமரி
குமரி மாவட்டம் இடலாக்குடி பகுதியை சார்ந்தவர் சபீக். இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சென்னை மாநகர உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இவர், நேற்று புலனாய்வு குற்றவியல் காவலர்களால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சபீக் த.வெ.க தலைவர் விஜய் குமரி மாவட்டம் வருவதை தடுப்பதற்காக மதுபோதையில் செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
